புதிதாக 1,222 பேர்... சென்னையில் மட்டுமே...!!

வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (15:41 IST)
சென்னையில் சளி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன் உள்ள 1,222 பேர் கண்காணிப்பில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,865 லிருந்து 6,412 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 169 லிருந்து 199 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 478 லிருந்து 504 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 834 பேரும், டெல்லியில் 720 பேரும், ராஜஸ்தானில் 463 பேரும், தெலுங்கானாவில் 440 பேரும், கேரளாவில் 357 பேரும், ஆந்திராவில் 348 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 163 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பலர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். 
 
அந்த வகையில் சென்னையில் புதிதாக சளி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன் உள்ள 1,222 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்