இந்நிலையில் இதற்காக புதிய விதி ஒன்றை ஐசிசி உருவாக்கி உள்ளது. அதன்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் கடைசி ஓவரை வீசி முடிக்காத போது, மீதமிருக்கும் அனைத்து பந்துகளுக்கும் அந்த அணி ஒரே ஒரு வீரரை மட்டுமே உள்வட்டத்துக்கு வெளியே பீல்டராக நிறுத்தி பந்துவீச முடியும் என்று அந்த விதி உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேட்ஸ்மேன்களுக்கு முழு சாதமாக இருக்கும் டி 20 போட்டிகள் இப்போது மேலும் அதை வலுப்படுத்தும் விதமாக புது விதி உருவாக்கப்பட்டுள்ளது.