தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சென்னையில் நேற்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்காக 10,000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டனர். சென்னையில் 449 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வருபவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.
ஊரடங்கு சமயத்தில் பெட்ரோல் பங்க்கள், பால் விநியோகம், பத்திரிக்கை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்ல வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வெள்ளிக்கிழமையான இன்று, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை உள்ளது. நாளையும், நாளை மறுதினமும் இந்தக் கட்டுப்பாடு தொடரும்.