நெல்லையில் செய்தியாளர்கள் 15 பேருக்கு கொரோனா!

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (15:12 IST)
2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. இதற்கான தடுப்புப் பணிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு போடப்பட்டு வருகின்றன. 
 
இரண்டாம் அலை வீச துவங்கியதில் இருந்தது மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை பணிக்காக  நெல்லையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் செய்தியாளர்கள்  15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்