அவங்க எப்படி விலை நிர்ணயம் பண்ணலாம்? நீங்க இலவசமா குடுங்க! – மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்!

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (13:53 IST)
இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளுக்கு தனியார் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்வது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் அவசரகால அனுமதி பெற்றுள்ள கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனங்கள் தடுப்பூசியின் விலையை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் “தடுப்பூசிக்கான விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது. தனியார் நிறுவனங்கள் விலையை நிர்ணயித்தால் எப்படி ஒரே விலையில் தடுப்பூசி கிடைக்கும். தடுப்பூசி விநியோக திட்டத்தை மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் இலவச தடுப்பூசி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்