கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் பூமி பிளந்து அந்த பகுதியில் உள்ள வீடுகள் சேதம் அடைந்திருப்பதை அடுத்து புவியியல் துறையினர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கோக்கால் என்ற மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த நிலையில் இந்த பகுதியில் திடீரென பூமி பிளந்துள்ளதாகவும் கட்டிடங்கள் ஒரு உருக்குலைந்து இடியும் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
ஐந்து வீடுகள், ஒரு முதியோர் இல்லம், ஒரு வழிபாட்டு தளம் என ஏழு கட்டிடங்கள் மோசமான நிலையில் இருப்பதை அடுத்து அங்கு புவியியல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகள் மண்ணில் புதைந்து விடுமோ என்ற பயத்தில் இருப்பதாகவும் அரசு அதிகாரிகள் இது குறித்து முறையான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புவியில் அதிகாரிகள் பூமி பிளவு ஏற்பட்டதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் மண்ணின் தன்மை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த பின் அந்த பகுதியில் உள்ள வீடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.