12 ரூபாய் எடுத்த வங்கிக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (14:44 IST)
நீங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கின்றீர் என்றால் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பிரதமரின் பிரதமர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.12 வங்கி எடுத்துள்ள அனுபவத்தை பெற்றிரூப்பீர்கள்.



 
 
அதேபோல் தன்னிடம் அனுமதி இல்லாமல், எந்தவித விண்ணப்பமும் பூர்த்தி செய்யாமல் பிரதமர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.12 எடுத்த வங்கி மீது நெல்லையை சேர்ந்த ஐயப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே ஐயப்பனின் 12 ரூபாயை வங்கி திருப்பி அளித்துவிட்டது. ஆயினும் இந்த வழக்கின் தீர்ப்பு வங்கிக்கு பாதகமாகவே வந்துள்ளது. மனுதாரர் ஐயப்பனின் சேமிப்புக் கணக்கிலிருந்து 12 ரூபாயை மனுதாரரின் சம்மதம் இல்லாமல் எடுத்து மன உளைச்சலை கொடுத்த வங்கிக்கு 8,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி இந்த அபராத தொகையை ஒருமாத காலத்துக்குள் வங்கிக் கிளை மேலாளர் வழங்க வேண்டும் என  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்