வங்கிகளில் டெபாசிட்; மீண்டும் புதிய கட்டுபாடுகள்: மத்திய அரசு தாடாலடி!!

திங்கள், 23 அக்டோபர் 2017 (12:18 IST)
வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ய மீண்டும் புதிய கட்டுபாடுகளை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இது குறித்து முழு விவரம் பின்வருமாறு...


 
 
கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு நடவடிக்கை என மத்திய அரசு பண பரிமாற்றத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 
 
அந்த வகையில் தற்போது, வங்கிகளில் ரூ.50,000-க்கு மேல் டெபாசிட் செய்ய தங்கள் அசல் அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டுமென்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
டெபாசிட் செய்பவர்கள் கொண்டு வரும் ஆவணத்தை வங்கி அதிகாரிகள் சோதனை செய்த பிறகே அடுத்த கட்ட டெபாசிட் செயல்முறைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
பணம் டெபாசிட் மட்டுமின்றி இது புதிய வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், சிட் பண்ட்ஸ், கூட்டுறவு வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கி சாராத நிறுவனங்கள் என அனைத்துக்கும் இது பொருந்தும் என மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்