தொகுதி மறுசீரமைப்பு: நம்ம முயற்சிதான் இந்தியாவை காப்பாற்றும்! - வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

Prasanth Karthick

வெள்ளி, 21 மார்ச் 2025 (11:19 IST)

நாளை தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிற மாநில முதல்வர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

இதற்காக கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் தமிழ்நாடு வரும் நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் பேசியுள்ள அவர் “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, தெலங்கானா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பாதிக்கப்படும். அப்படி நடந்தால் இந்தியாவுக்கான கூட்டாட்சி பொருளே இல்லாமல் போய்விடும். ஜனநாயகத்தின் மதிப்பும் இருக்காது. நாடாளுமன்றத்தில் நம் குரல்கள் நசுக்கப்படும், நம் உரிமைகளை நிலைநாட்ட முடியாது

 

மக்கள்தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுக்கக்கூடாது. அதனால்தான் பிற மாநிலங்களை ஒருங்கிணைக்க அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் நாளை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.

 

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி, அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். நம் முன்னெடுப்பு இந்தியாவை காக்கும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்