மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழகம் வந்துள்ளார்.
மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ள நிலையில் அதனால் தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகள் குறையும் அபாயம் எழுந்துள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்து ஆரம்பம் முதலே திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தகுதி மறுசீரமைப்பு குறித்து கூட்டு நடவடிக்கைக் குழு ஏற்படுத்துவது குறித்த கலந்தோலசனை மேற்கொள்ள பிற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி திமுக பிரபலங்கள் பலரும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களை சந்தித்து மார்ச் 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில் அந்த அழைப்பை ஏற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்றே சென்னை வருகை தந்துள்ளார். அவரை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்றனர். இன்றும் நாளையும் மற்ற மாநில முதல்வர்களும் சென்னை வர உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று சென்னை வந்துள்ள பினராயி விஜயன் இன்றே முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும், தமிழக - கேரள உறவு குறித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K