கடந்த சில மாதங்களில் வேகமாக உயரத் தொடங்கிய தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில் இன்று சற்றே தங்கம் விலை குறைந்துள்ளது.
கடந்த 14ம் தேதி வரை தொடர்ந்து விலை ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, அன்று புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.66,400 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. அன்றைய தினம் மட்டுமே ரூ.1,440 ரூபாய் விலை உயர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து தங்கம் விலை சற்று குறைவதும், பின் அதிகரிப்பதுமாக இருந்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தொடர் விலை உயர்வை சந்தித்து வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 வரை குறைந்து ஒரு கிராம் ரூ.8,270 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
ஒரு சவரனுக்கு ரூ.320 ரூபாய் குறைந்து சவரன் ரூ.66,160 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
மேலும் இன்று வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 ரூபாய் குறைந்து கிராம் ரூ.112 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
Edit by Prasanth.K