ராஜேந்திர பாலாஜிக்கு அட்மிஷன் போடனும்; கீழ்பாக்கம் மெண்டல் ஹாஸ்பிடலில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (11:45 IST)
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மனநலம் குன்றியுள்ளதால் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும்படி காங்கிரஸார் கேட்டுக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்தது அவரது தொண்டர்கல் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிபாடாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 
 
இதில் உச்சகட்டமாக கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிகிச்சை அளிக்க கோரி மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அமைச்சரின் நடவடிக்கைகளை பார்த்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்றுள்ளது. 
 
அவர் காங்கிரச் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை தரக்குரைவகா பேசியுள்ளார். எனவே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்படிருந்தது. இந்த மனுவை நிராகரித்த மருத்துவமனை தரப்பினருடம் காங்கிரஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்