செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Mahendran

சனி, 22 பிப்ரவரி 2025 (09:40 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆகி உள்ள நிலையில், அவர் மீது அதிருப்தி அடைந்த தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் இன்று ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, நேற்று அதிருப்தி அடைந்த காங்கிரஸ் பிரமுகர்கள் தமிழகத்தின் புதிய மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்ததாகவும், இதை தொடர்ந்து பிரியங்கா காந்தியை சந்தித்த இந்த குழு அடுத்த கட்டமாக ராகுல் காந்தியை சந்தித்து தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

செல்வப்பெருந்தகை தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், தொண்டர்களின் உணர்வு குறைந்து வருகிறது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அவர் ஏற்கனவே இருந்தவர் என்பதால், அதே பாணியை தான் தேசிய கட்சியிலும் செயல்படுத்த முற்படுகிறார் என்றும், அது சரியான அணுகுமுறையாக இருக்காது என்றும் மேலிட தலைவர்களிடம் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்