GET OUT MODI.. 2019ஆம் ஆண்டின் பதிவுக்கு குஷ்பு விளக்கம்..!

Mahendran

வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (14:03 IST)
ஒரு பக்கம் "கெட் அவுட் மோடி" என்றும், இன்னொரு பக்கம் "கெட் அவுட் ஸ்டாலின்" என்றும் ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகிவரும் நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு "கெட் அவுட் மோடி" என நடிகை குஷ்பூ தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
 
அது தொடர்பாக தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு, குஷ்பூ தனது சமூக வலைதளத்தில் "கெட் அவுட் மோடி" என குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் தாமரை மலராது எனக் கூறியிருந்தார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், அதற்கு அவர் கூறிய விளக்கம் பின்வருமாறு:
 
 "குற்றத்தில் கூட்டாளிகள் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். காங்கிரஸ், திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே மொழியை பேசுகின்றன. கண்ணு இல்லாத தம்பிகளா? நான் ஏன் இரண்டு கட்சிகளை விட்டு வெளியேறினேன் தெரியுமா? ஜோக்கர்களின் ஒரு பகுதியாக இருக்க மறுத்ததால்தான் நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினேன்.
 
நான் புத்திசாலியாக சிந்திக்கும் திறன் கொண்டிருந்ததால்தான் காங்கிரஸை விட்டு விலகினேன். சிந்திக்கிற மண்டை இல்லைன்னு அடிக்கடி நிரூபிக்கிறீங்க. மூளை சிதைந்த இனமாக நீங்கள் இருப்பதில் தவறு இல்லை, ஏனெனில் நீங்கள் பின்பற்றுபவர் அப்படிப்பட்டவர்தான்" என்று கூறியுள்ளார்.
 
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்