புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி: 7171 வாக்குகள் வித்தியாசம்

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (09:12 IST)
புதுச்சேரி காமராஜ் நகரில் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக ஜான் குமார் என்பவரும், அதிமுக கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளராக புவனேஸ்வரன் என்பவரும் போட்டியிட்டனர்.
 
இன்று காலை 8 மணி முதல் இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இந்த தொகுதியில் தபால் வாக்குகள் ஏதும் பதிவு செய்யப்படாததால் நேரடியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டத்
 
இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14782 வாக்குகள் பெற்றார். என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7611 வாக்குகள் பெற்றார். இதனையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
 
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் புதுவை காமராஜ் தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்