வாக்குப்பதிவு தொடங்கியது: விறுவிறுப்பான வாக்குப்பதிவு என தகவல்

திங்கள், 21 அக்டோபர் 2019 (07:33 IST)
தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுவையில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சரியாக 7 மணிக்கு மேற்கண்ட மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது
 
அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் சற்றுமுன் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
 
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் இரு தொகுதியிலும் காமராஜ் நகர் தொகுதியிலும் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி இருப்பதால் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாமல் உள்ளது
 
இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று இரவுக்குள் அதிகாரபூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் இரு தொகுதி முடிவுகளால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் இரு கட்சிகளின் தலைமையின் நம்பகத்தன்மை இந்த தேர்தலில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்