டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத இனி கணினி சான்றிதழ் கட்டாயம்..!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:39 IST)
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதவும் விண்ணப்பதாரர்கள் கணினி சான்றிதழ் இனி கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 உள்ளிட்ட தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கணினி சான்றிதழ் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அது குறித்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 
 
கணினி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நிரந்தரம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சான்றிதழ் படிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் அரசு நடத்துகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி, நீதிமன்றம் போன்ற அரசு வேலை பெறுவதற்கு இந்த படிப்பு கட்டாயம் என்றும் கூறப்படுகிறது. 
 
எனவே டி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் ஆபீஸ் ஆட்டோமேஷன் என்று கூறப்படும் கணினி சான்றிதழ் படிப்பை படித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்