சிவகங்கை அருகே உள்ள கூத்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் மதுபாலா வயது (28) இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளன இவரது கணவர் பார்த்திபன் வயது (34) குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுபாலாவின் கணவரை அடிப்பது போன்ற வீடியோவை மதுபாலாவின் கணவர் பார்த்திபன் மனைவி மதுபாலாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
தற்போது இன்று வரை அவரது கணவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
தேர்தல் நேரம் என்பதால் இரண்டு நாள் கழித்து வரும்படி அதிகாரிகள் கூறிய நிலையில் மீண்டும் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் கணவரைநிலை பற்றி அறிய வேண்டும் எனவும் கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் கை குழந்தைகளுடன் அதிகாரிகளை காண காத்திருந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.