Work From Homeனு சொல்லிட்டு இழுத்து மூடிய கம்பெனி! ஓவர் நைட்டில் வேலை இழந்த 2000 ஊழியர்கள்!

Prasanth Karthick

செவ்வாய், 28 ஜனவரி 2025 (09:07 IST)

கோவையில் இயங்கி வந்த தனியார் ஐடி நிறுவனம் ஒன்று பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்லிவிட்டு மொத்தமாக கம்பெனியை இழுத்து மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்கு பின் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, ஏஐ தொழில்நுட்ப தாக்கம் போன்றவற்றால் உலக அளவில் ஐடி நிறுவன ஊழியர்கள் பணி இழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது. பல நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் பல ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்கியுள்ளன.

 

இந்நிலையில் கோவை, சென்னை, பெங்களூர் என பல முக்கிய நகரங்களில் கிளை அமைத்து செயல்படும் ஐடி நிறுவனம் ஒன்றில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இதன் கோவை கிளையில் பணிபுரிந்தவர்களை கடந்த சில மாதங்கள் முன்னதாக வீட்டிலிருந்தே பணியாற்றும்படி (Work From Home) அந்நிறுவனம் கூறியுள்ளது.

 

மேலும் சம்பள உயர்வு போன்றவை பல மாதங்களாகவே வழங்கப்படவில்லை என அந்த பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த சில தினங்கள் முன்னதாக அந்த நிறுவனம் மொத்தமாக இழுத்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த பணியாளர்கள் தங்களுக்கான ஊதியம், பணி சான்றிதழையாவது வழங்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்