இந்த பேருந்தில் 40 பயணிகள் பயணம் செய்த நிலையில், திடீரென திட்டக்குடியை அடுத்த அரங்கூர் என்ற பகுதிக்கு வந்தபோது, பேருந்தின் முன் இடது பக்க சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது.
இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். ஆனால், பேருந்து ஓட்டுனர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார்.
இதனால் பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். இருப்பினும், மிக மோசமாக பராமரிக்கப்பட்ட பேருந்துகள் உயிரைப் பணயம் வைத்து இயக்கப்படுவதா? என, சமூக அக்கறை கொண்டவர்கள் கேள்வி எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.