KTCC எனப்படும் காற்றின் போக்கு காரணமாக, திருக்கழுக்குன்றம் முதல் கிழக்கு கடற்கரைச் சாலை வரையிலும், மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இன்று அதிகாலையில் சென்னை நகரில் புதிய புயல் செல்கள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக, அண்ணா நகர், நுங்கம்பாக்கம் போன்ற நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நுங்கம்பாக்கத்தில் மழை அளவு 50 மி.மீ நெருங்கியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய புயல்கள் நகரின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கி நிற்பதால், அந்த பகுதியில் மழை அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. உதாரணமாக, நுங்கம்பாக்கத்தில் பெய்து வரும் கனமழை, ஒரு மணி நேரத்திற்கு முன்புவரை வானத்தில் ஒரு மேகம்கூட இல்லை என்ற நிலையில் இருந்து திடீரென உருவாகியுள்ளது.