களத்தில் கமாண்டோக்கள்: கட்டுக்குள் வருமா கொரோனா??

வெள்ளி, 26 ஜூன் 2020 (10:20 IST)
காவல்துறையின் கமாண்டோ பிரிவினர் வட சென்னை பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
நேற்று தமிழகத்தில் 3,509 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக பாதிப்பு 3000ஐ தாண்டியுள்ளது  பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3,509 பேர்களில் 1,834 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,650 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் வட சென்னை பகுதியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களை கட்டுப்படுத்த காவல்துறையின் கமாண்டோ பிரிவு களத்தில் இறக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இரண்டு பிரிவாக உள்ள கமாண்டோ வீரர்கள் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது. 
 
இதன் மூலம் மக்கள் கண்காணிக்கப்பட்டு வெளியே வராமல் தடுக்கப்பட்டு பரவலையும் கட்டுக்குள் கொண்டுவருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்