சமூக விலகலின்றி டாஸ்மாக்கில் குவிந்த மக்கள் !

வியாழன், 25 ஜூன் 2020 (23:17 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 3509 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது

ரோனாவால் பாதிப்பு அடைந்த 3509 பேர்களில் 1834 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,650 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று 1800க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  சென்னையை அடுத்து மதுரையில் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில்  சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மது வாங்க காத்திருந்த மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் முழு ஊரடகு அமலில் உள்ள நிலையில்  சிவகங்கை மாவட்டம் புலியூர் மதுக்கடையில் மது வாங்க பொது மக்கள் வரிசையில் நின்றனர். ஆனால்,  சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் நின்றதால் கொரொனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்