தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசின் அலட்சியமும், மிதமான செயல்பாடுகளுமே கொரோனா பரவ காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைச்சர்கள் சிலரும் அவ்வபோது பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசியுள்ளத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “முக ஸ்டாலின் ஊரடங்கில் வீட்டில் இருக்க மாட்டாமல் தவறான தகவல்களை தொடர்ந்து மக்களிடம் பரப்பி வருகிறார். மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்கட்சிகள் யாரும் ஸ்டாலினை போல செயல்படவில்லை. அரசியல்ரீதியாக அதிகாரத்தை கைப்பற்றவும், அரசியலில் தான் இருப்பதை காட்டிக் கொள்ளவும் தொடர்ந்து ஏதாவது அறிக்கைகளை விடுத்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.