ஸ்டாலின் கூறியது பின்வருமாறு, மேகதாது விவகாரத்தில் ஏற்கெனவே திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அந்த தீர்மானத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், கண்டனக் கூட்டத்தை நடத்தி இருக்கிறோம்.
ஆகவே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நாளை மாலை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் அரசின் சார்பில் வைக்கப்படக்கூடிய தீர்மானத்தை பொறுத்து நாங்கள் எங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லுவோம்.
மேலும், கஜா புயல் பற்றியெல்லாம் அதிமுக கவலைப்படுவதாக இல்லை. ஆட்சியை எப்படியாவது தக்கவைத்து கொள்ள வேண்டும். அதற்கு மோடி தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடப்பதற்கு அவர்கள் தொடர்ந்து தயாராகி கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்து உள்ளார்.