வெளியே துணி வியாபாரி.. உள்ளே கடத்தல் மன்னன்! – பாட்ஷா பாய் கைது!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (08:50 IST)
கோயம்புத்தூரில் துணி வியாபாரம் செய்வது போல காட்டிக் கொண்டு செம்மரக்கட்டைகளை கடத்திய கடத்தல் மன்னன் பாட்ஷா பாயை பெங்களூரில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலம் கடப்பாவில் டிப்பர் லாரியுடன் கார் மோதியதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில் கடத்தல் கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்ற செம்மரக்கட்டைகளை திருட சென்றபோது விபத்து ஏற்பட்டதாக பின்னர் தெரிய வந்துள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் குறித்த விசாரணையில் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பாட்ஷா பாய் என்றழைக்கப்படும் ஹக்கிமை பெங்களூர் போலீஸ் கைது செய்துள்ளனர். இந்த ஹக்கிம் கோயம்புத்தூரில் துணி வியாபாரம் செய்வதாக காட்டிக் கொண்டு செம்மர கடத்தலில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் ஹக்கிமிற்கு பையாஸ் செரிப் என்ற சர்வதேச கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்