என்றும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவாளி. ஒவ்வொரு வீட்டிலும், தீபாவளி தினத்தன்று புத்தாடை உடுத்தி கடவுளை வணங்கி உற்சாகமுடன் பலகாரங்களைத் தின்று மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
ஆனால் இந்த வருடம் ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவால் சிக்கி படாதபாடு பட்டுவருகின்றது.
செல்வந்தர்களே இந்த கொரொனாவால் மிரட்சி அடைந்தார்கள் எனில் மத்தியத் தரவர்க்கமும், ஏழைகளும் என்ன பாடு படுகிறார்கள் என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்லி மாளாது.
வேலையில்லாத் திண்டாட்டம், வருமானம் இல்லை,நோய்ப்பதற்றம் ஆகியவற்றால் இந்த வருடம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பட்டாசு வெடிப்பதிலோ அல்லது, பண்டிகையின்போது புதுத்துணி உடுத்தி மகிழ்வதோ எழைகளுக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வருடம் பட்டாசு கூட சில மாநிலங்கள் வேண்டாம் என தடை விதித்து பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளன. சமூக இடைவெளியைக் கடைபிடித்து வந்தால் மக்களும் தொற்றின்று மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடலாம்.