ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.75,000 இழப்பு: கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (09:06 IST)
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் 75 ஆயிரம் ரூபாயை இழந்த நிலையில் அவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் தமிழக அரசும் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பதும் தெரிந்ததே. ஆனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு திமுக அரசு துணை போகிறது என்று எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்
 
இந்த நிலையில் சேலம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்ததால் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி செய்தார்
 
இதனையடுத்து அவரை தகுந்த நேரத்தில் காப்பாற்றி சிகிச்சைக்காக ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்தனர். இந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்