19 வயது கல்லூரிப் பெண் தற்கொலை… வீடியோவை வைத்து மிரட்டிய மர்ம நபர் யார்?

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (16:49 IST)
திருச்சி அருகே உள்ள மனப்பாறையில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே மனப்பாறையைச் சேர்ந்தவர் அந்த 19 வயது மாணவி. புதுக்கோட்டையில் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய தேடலில் அந்த பெண்ணின் சடலம் வீட்டருகே இருந்த கிணற்றினருகில் மீட்கப்பட்டது.

இதையடுத்து மாணவியின் கடிதம் மற்றும் செல்போன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது செல்போனில் ஒரு எண்ணில் இருந்து ‘வீடியோவை ஷேர் செய்யவா? ‘ என வந்த மெஸேஜிற்கு அந்த பெண் ‘ப்ளிஸ் வேண்டாம்… அழித்து விடு’ எனக் கூறியுள்ளார். அந்த நபர் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்