இன்று MSME தினம்.. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (15:58 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27ஆம் தேதி MSME தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்றைய MSME தினத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சிறுதொழில் முனைவோர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
பெருந்தொழில்களைப் போல் குறு, சிறு தொழில்களும் வளர வேண்டும். நாட்டைத் தாங்கிப் பிடிப்பதில் #MSME-க்களின் பங்கு இன்றியமையாதது.
 
30,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் ரூ.1723 கோடி மதிப்பிலான முதலீடுகளை உறுதி செய்யும் நாளாக இந்த #MSMEday அமைந்தது.
 
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
 
முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணைகள்
 
கொடூர், மணப்பாறை & சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262.03 ஏக்கர் பரப்பளவில் ரூ. 153.22 கோடி மதிப்பீட்டில் மூன்று தொழிற்பேட்டைகள். 21,500 பேருக்கு வேலைவாய்ப்பு.
 
காடம்புலியூரில் ரூ.2 கோடியே 16 இலட்சம் திட்ட மதிப்பீட்டில், அதில் ரூ.1.81 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம்
 
சந்தை வாய்ப்பினை உருவாக்கிடும் நோக்கோடு மெய்நிகர் கண்காட்சியகம்
 
பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வெற்றி பெற்ற மாணவ அணிகளின் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்குப் பரிசுத்தொகை
 
FaMe_TN & #SIDBI இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
 
MSME-க்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விருதுகள்
 
தொழில்முனைவோர்களைக் காத்து நம் இலக்கை நோக்கி விரைவோம்!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்