இது தமிழ்நாடு, இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (17:37 IST)
இது தமிழ்நாடு, இங்கே உங்கள் அரசியல் விளையாட்டுகள் எடுபடாது என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் அரசியல் தளத்தை அடக்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
நேற்று மதுரையில் நிதியமைச்சர் டி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் சுப்பு வீசப்பட்டது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்து போது ’மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி, தேசியக் கொடியை அவமதிப்பு செய்ய முயன்றவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்
 
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். தமிழ் நாட்டின் அமைதிக்கு எந்த குந்தகமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவனத்துடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் தமிழ் நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்