டான் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை தட்டி தூக்கிய உதயநிதி ஸ்டாலின்

சனி, 13 ஆகஸ்ட் 2022 (15:57 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் இப்போது டான் படத்தின் தொலைக்காட்சி உரிமம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முதலில் டான் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், ஆனால் படத்தின் வெளியீட்டை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை முடித்து படத்தைக் கலைஞர் தொலைக்காட்சிக்கு முடித்ததாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்