செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகையா?

புதன், 14 ஜூன் 2023 (08:20 IST)
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாகவும் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை பரிசோதனை செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சென்னை வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு என்று காலை 11 மணியளவில் சென்னை வருவார்கள் என்று கூறப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி முடிவு எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்துச் சென்று விசாரணை செய்யவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்