நமது அரசியல்வாதிகள் இதய பலவீனமானவர்கள்: நடிகை கஸ்தூரி கிண்டல்..!

புதன், 14 ஜூன் 2023 (10:03 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறை அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு திமுக உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்து கிண்டலாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கைது நடவடிக்கையின் போது செந்தில் பாலாஜி எவ்வளவு துடிக்கிறார்? ரெய்டு போகும்போது அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் மருத்துவர்களை அவசியம் அழைத்துச் செல்ல வேண்டும். 
 
இந்திய அரசியல்வாதிகள் வலுவில்லாத இதயத்தை கொண்டிருக்கிறார்கள், எனவே சிறைச்சாலைகளில் இதயத்திற்கு என சிறப்பு சிகிச்சை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். காவலர்களும் இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பயிற்சி பெற வேண்டும். ஆம்புலன்ஸ்களில் கைது செய்த பின் அரசியல்வாதிகளை அழைத்துச் செல்லலாம் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்