செந்தில் பாலாஜியை பார்க்க முதல்வர் செல்கிறாரா? பரபரப்பு தகவல்..!

புதன், 14 ஜூன் 2023 (08:15 IST)
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
நேற்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனை அடுத்து நேற்று நள்ளிரவு திடீரென அவர் கைது செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை பார்க்க இன்று காலை 9.30 மணி அளவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஓமந்தூரார் மருத்துவமனையின் ஆறாவது மாடியில் உள்ள ஐசியூ வார்டில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரை நேரில் பார்க்கும் முதல்வர் அதன்பின் மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டு அறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்