அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறை வேறு அமைச்சரிடம் ஒப்படைக்கப்படுமா?

புதன், 14 ஜூன் 2023 (08:27 IST)
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது துறை வேறு அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 
பொதுவாக ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவர் தானாகவே பதவி விலகுவார் அல்லது பதவி விலக்கப்படுவார் என்ற நடைமுறையாக இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதை அடுத்து கைது நடவடிக்கை 5 நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் அவரது அமைச்சர் பதவி தானாகவே பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில்  தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறையை வேறு அமைச்சருக்கு மாற்றி கொடுப்பார் என்று கூறப்படுகிறது. 
 
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடக்க நடவடிக்கை முறைப்படி சபாநாயகர் இடம் தெரிவிக்கப்பட்டு அதன் பின்  முதலமைச்சர் அவர் துறையை வேறு நபரிடம் அதிகாரப்பூர்வமாக மாற்றுவார் என்று கூறப்படுகிறது. இது குறித்து சட்ட வல்லுனர்களிடம் தமிழக முதல்வர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்