ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடைகளை உடைத்தது திமுக அரசுதான்: முதல்வர் ஸ்டாலின்

Mahendran
புதன், 24 ஜனவரி 2024 (11:37 IST)
இன்று மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
 
ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராடியவர்களை அதிமுக அரசு அடித்து விரட்டியது, 
ஜல்லிக்கட்டு போட்டிக்காக இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு அதிமுக அடி பணிந்தது அதிமுக அரசு. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடைகள் அனைத்தையும் உடைத்தது திமுக அரசுதான்.
 
தை மாதம் வந்தாலே மாண்புமிகு மூர்த்தி ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறி  விடுவார். தமிழர்' என்ற அடையாளத்துடன் ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு திருவிழாவை ஒற்றுமையாக நடத்துவோம்!
 
ஏறு தழுவுதல் அரங்கத்தை கட்டியவர் ஸ்டாலின் என்று வரலாற்றில் இடம்பெற்றுவிட்டேன். மதுரையில் கீழடி, கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் அமைந்துள்ளது. போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள், தூளாக்கும் நகரம் மதுரை. "தை மாதம் வந்தாலே அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறிவிடுவார்கள்.
 
திமுக அரசின் தீவிர முயற்சியால், நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற்றோம். மத்திய அரசு மதுரையில் 2016ல் அறிவித்து அடிக்கல் நாட்டிய பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்