தமிழகத்தின் பொருளாதாரம் 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் ஒரு லட்சிய இலக்கினை நிர்ணயித்துள்ளார். இதன் முன்னோட்டமாக சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவில் 6,64,180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள், 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், முதலீடுகளை ஈர்க்கவும் தொழில் நிறுவனங்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.