மத்திய அரசுக்கு துணை நிற்போம்: முதல்வர் ஸ்டாலின் உரை!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (18:46 IST)
மத்திய அரசுடன் ஒரு சில விஷயங்களில் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தாலும் மத்திய அரசுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விஷயத்தில் துணை நிற்போம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் உரையாற்றி உள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு துணை நிற்கும் என பிரதமருடனான முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தியுள்ளார்
 
முன்னதாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றுதான் வழி என்றும் அதனை அனைவரும் செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி, முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்