விரைவு ரயில் தடம் புரண்டு 4 பெட்டிகள் சேதம்: விரைந்தது மீட்புக்குழு

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (18:40 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அசாம் சென்ற விரைவு ரயில் திடீரென தடம் புரண்டதை அடுத்து மீட்புக் குழுவினர் விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அசாமுக்கு சென்ற விரைவு ரயில் ஒன்று மேற்கு வங்கத்தின் தோமோஹானி  என்ற பகுதியில் திடீரென தடம் புரண்டது. இதில் 4 பெட்டிகள் தடம்புரண்டு உள்ளதாகவும் இந்த விபத்தில் உயிரிழப்பு குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது
 
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அசாம் மாநிலம் சென்ற பீக்கானீர் என்ற விரைவு ரயில் மேற்குவங்கத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து தடம்புரண்ட பெட்டிகளில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் விரைந்து ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்