10,000 ரூபாய் கொடுத்தால் கலைஞர் நாணயம் கிடைக்கும் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (15:43 IST)
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் 10,000 ரூபாய் கொடுத்து 100 ரூபாய் கலைஞர் நாணயம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலைஞர் கருணாநிதி உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் நேற்று வெளியான நிலையில் இன்று திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசிய போது கலைஞர் நாணயம் அறிவாலயத்துக்கு வந்துவிட்டது என்றும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று 100 ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதன் மதிப்பு 10,000 ரூபாய் என்று தெரிவித்துள்ளார்.

எனவே யார் வேண்டுமானாலும் 10,000 ரூபாய் கொடுத்து அறிவாலயத்தில் சென்று நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஏனென்றால் காந்தி நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நான் ஒரு லட்ச ரூபாய் தருகிறேன் என்று சொன்னார். அவர் ஒரு லட்சம் என்ன 10 லட்சம் கொடுத்து கூட வாங்கிக் கொள்வார் என்றும் அவர் கூறினார்.

100 ரூபாய் நாணயத்தை 10 ஆயிரம்  ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழக முதல்வர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்