மகத்தான வெற்றி கிடைத்துள்ளது: ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின்..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (12:24 IST)
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக தொடங்கப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பை தமிழகமே கொண்டாடி வருகிறது. 
 
இது குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:  
 
தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!
 
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.
 
மேலும் தமிழக அரசு சிறந்த வழக்கறிஞர்களை வைத்து சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ளது என்றும் ஒருமித்த தீர்ப்பு  காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்