விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலி: தமிழ்நாடு அரசிடம் அறிக்கை கேட்ட ஆளுனர் ஆர்.என்.ரவி

புதன், 17 மே 2023 (23:08 IST)
விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு  மாநில ஆளுனர் ஆர்.என்.ரவி  மாநில அரசிடம் இன்று  அறிக்கை மற்றும் விளக்கம் கேட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த  13 ஆம் தேதி இரவு விஷச்சாராயம் விற்றதை வாங்கிக் குடித்த பலருக்கு உடஅல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதில், 14 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை பகுதியில், கடந்த சனிக்கிழமை அன்று விஷச்சாராயம் குடித்த 8 பேர் பலியாகினர். இந்த விஷச்சாரயம் குடித்து மொத்தம் 22 பேர் பலியான  நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சாராய வியாபாரிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்., இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு  மாநில ஆளுனர் ஆர்.என்.ரவி  மாநில அரசிடம் இன்று  அறிக்கை மற்றும் விளக்கம் கேட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்