தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தபோது, கனமழை பெய்யும் என்று 17ம் தேதிதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது என்று கூறினார். செய்தியாளர்களிடம் முதல்வர் மேலும் கூறியதாவது:
150 ஆண்டுகள் இல்லாத மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை மிக மோசமாக உள்ளன என்று தெரிவித்தார்.