வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை..!

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (13:03 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இது குறித்த முக்கிய ஆலோசனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது 
 
வடகிழக்கு பருவமழையின் பலன்களை அதிகம் பெறுவதும் அதே நேரத்தில் பருவ மழையால் ஏற்படும் சேதங்களை தவிர்ப்பதும் அவசியம் என இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். 
 
மேலும்  பருவ மழையால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதி மக்களை தங்க வைக்க பாதுகாப்பான இடங்களை கண்டறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் போது முன்னெச்சரிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் தமிழகம் எங்கும் அவசர கால கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்ப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார். 
 
மேலும் பருவமழை காரணமாக ஏற்படும் சேதங்கள் குறித்து அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்