கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சிரஜுல் உலூம் ஆங்கில பள்ளியின் ஆசிரியர்களான கதிஜா மற்றும் ஷமீல் ஆகியோர், ஓணம் விழாவானது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும், அதில் பங்கேற்பது பாவத்திற்கு வழிவகுக்கும் என்றும் பெற்றோர்களுக்கு குரல் பதிவுகள் மூலம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "இது ஆசிரியர்களின் தனிப்பட்ட கருத்து. பள்ளிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று தெரிவித்துள்ளது. மேலும், பள்ளி திட்டமிட்டபடி ஓணம் விழாவை நடத்தும் என்றும் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
ஆசிரியர்களின் பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான டிஒய்எஃப்ஐ இந்த வெறுப்பு பேச்சு குறித்து காவல்துறையில் புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில், ஆசிரியர்கள் கதிஜா மற்றும் ஷமீல் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.