கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பாராட்டு -முதல்வர்

சனி, 16 செப்டம்பர் 2023 (14:48 IST)
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன நேற்று, திராவிட மாடலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை காஞ்சியில்  முதல்வர் மு.க.ஸ்டாலின்   தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம்  1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் 1000 வழங்கப்படவுள்ளது.

இத்திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூகலைதள பக்கத்தில்,

’’இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள்,  நகராட்சி - மாநகராட்சிப் பணியாளர்கள்,  தமிழக இ கவர்னென்ஸ் பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்!

களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!’’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்