தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை படிக்கவில்லையா கவர்னர்? முதல்வர் கண்டனம்

திங்கள், 9 ஜனவரி 2023 (12:34 IST)
தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக ஆளுநர் ரவி படிக்கவில்லை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக சட்டசபையில் இன்று காலை உரையாற்றிய ஆளுநர் தமிழ்நாடு, திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை படிக்காமல் புறக்கணித்ததாக தெரிகிறது. தமிழ்நாடு என்ற வார்த்தை இடம் பெற்ற ஒவ்வொரு வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்து விட்டதாகவும் அதேபோல் சில இடங்களில் தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக இந்த அரசு என்று ஆளுநர் குறிப்பிட்டதாகவும் தெரிகிறது
 
ஆளுநரின் இந்த உரைக்கு பேரவையில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநரின் செயலை முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டசபையிலேயே கண்டனம் தெரிவித்தார்.
 
இதனால் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஆளுநர் வெளியேறிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அச்சடிக்கப்பட்ட உரையை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் என்று பேரவையில் முதல்வர் அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்