சங்க இலக்கியத்தில் ‘தமிழ்நாடு’ என்று இல்லவே இல்லை! – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

திங்கள், 9 ஜனவரி 2023 (09:08 IST)
தமிழ்நாடா? தமிழகமா? என்ற சர்ச்சை தொடர்ந்து நிலவி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அளித்துள்ள விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு’ என்று அழைப்பதை விட மாநிலத்தை ‘தமிழகம்’ என்று அழைப்பதே பொருத்தமானது என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்துக்கு திமுக மற்றும் தோழமை கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ட்விட்டரில் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த பல அரசியல், கலை உலக பிரமுகர்களும் தமிழ்நாடு என்று அழைப்பதே சரி என தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள முன்னாள் பாஜக தலைவரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே சரியானது என்றும், சங்க இலக்கிய தமிழ் நூல்களிலும் கூட தமிழ்நாடு என்ற வார்த்தை இல்லாமல் தமிழகம் என்ற வார்த்தையே உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்தை மறுத்துள்ள சிலர் சமூக வலைதளங்களில் தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளை மேற்கோள் காட்டி பேசி வருகின்றனர்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்