செஸ் ஒலிம்பியாட் படப்பிடிப்பு: முதல்வர் ஸ்டாலின் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கினார்!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (10:14 IST)
செஸ் ஒலிம்பியாட் படப்பிடிப்பு: முதல்வர் ஸ்டாலின் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கினார்!
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் இது குறித்த விளம்பர திரைப்படத்தில் முதல்வர் முக ஸ்டாலின் நடிக்க, அதை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய தகவல் வெளியாகியுள்ளது 
 
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான விளம்பர திரைப்படம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது
 
இந்த விளம்பர திரைப்படத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஒரு சில காட்சிகளில் நடித்தார் என்றும் அந்த காட்சிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இந்த விளம்பரத்தை படத்திற்கு இசையமைக்க ஏற்பதாகவும் சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் அருகே முதல்வரின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்